ஜோதிடத்தில் சனி பகவான் என்றாலே எல்லோரும் பயப்படுவது ஏன்? சனி பகவான் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

சனி பகவான்குறித்த சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள்

சனி பகவானைப்போல் கொடுப்பவர் இல்லை என்பது பழமொழி. ஆனால் நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இருப்பினும் சனி பகவானை குறித்து சில உண்மைகளை நாம் அறிந்துகொள்ளும்போது அவர் மீது எழும் தேவையற்ற பயம் மாறி பக்தி பெருகும்.

sani-bagawan
சரி வாங்க இனி சனி பகவான குறித்து சில உண்மைகளை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?
ஆன்மீக தகவல்கள்:
வானியல் சாஸ்திரப்படி, சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் உள்ள பாதையில் சுற்றி வருவது சனி. சனி பகவான் மற்ற கிரகங்களை விட மிக மெதுவாக சுழல்பவர், சனி பகவான் ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஆகும்.

ராசி மண்டலத்தை கடக்க 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே இவரை மந்தன் என்பார்கள். காரி, முடவன், காகம் ஆகிய பட்டைப்பெயர்களும் இவருக்கு உண்டு.


ஆன்மீக தகவல்கள்:
ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுவர் சனிபகவான். அவர் கருணையினாலேயே ஒருவர் நீடித்த ஆயுளைப் பெறமுடியும்.

முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பல பலன்களை தந்து, நம் பாவ சுமையினை கலைப்பவர்.

சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டிலில் குழந்தையாக இருந்தபோதே, இருகரம் கூப்பி சிவபெருமானை பக்தியுடன் வணங்கியவர்.

ஆன்மீக தகவல்கள்:
காசியில் லிங்கப் பிரதிஸ்டை செய்து சிவனை பூஜித்து அவரருளால் ஈஸ்வர பட்டம் பெற்று சனீஸ்வரர் ஆனார். எனவே தினமும் சிவபெருமானை வணங்கி வழிபடுபவர்களுக்குச் சனிபகவான் நற்பலன்களை வரி வழங்குவார்.

ஆன்மீக தகவல்கள்:
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருக்கிறார் என்றால், நாட்டுக்கே தலைவராகும் யோகம் கிடைக்கும்.

அன்னிய மொழிகளில் புலமை, விஞ்ஞானத்தில் அதிக தேர்ச்சி, மருத்துவ துறையில் புகழ், ஆகியன சனிபகவானின் அருள்பார்வையால் கிடைக்கும்.

sani-bhagwan
சனிபகவானுக்குரிய நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பஞ்சபூதங்களில் இவர் காற்று.

ஆன்மிக தகவல்கள்:
கருமை நிற மேனியுடையவர், கருப்பு வஸ்திரம் அணிபவர், சனிக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று சனிக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபட நோய்களில் இருந்து விடுபடலாம்.

காக்கை, எருமை ஆகியவை இவரது வாகனம், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காக்கைக்கு சாதமிட்டுப்பின் உண்பதன் மூலம் கெடுபலன்கள் குறையும், நற்பலன்கள் பெருகும்.

ஆன்மீக தகவல்கள்:
சனிபகவான் எள்ளு சாதம் பிரியர், எனவே எள்ளு சாதம் நைவேதியம் செய்து, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, பாவங்கள் அகலும், செல்வவளம் சேரும்.

சனிக்கிழமைதோறும் விரதம் கடைபிடிப்பது நன்று. சிவன் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் இருக்கும் சனீஸ்வரருக்கு, மாலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. எள் – எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் வறுமை நீங்கும். செல்வம் பெருகும்.

Sani bagavanசனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் பணம் வழங்குவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்!
ஆன்மீக தகவல்கள்:
அஷ்டம சனி, அர்த்ராஷ்டம சனி, ஜென்ம சனி நடைபெறுபவர்களுக்கு ஒரு முறையாவது திருநள்ளாறு சென்று வர வேண்டும். நளதீர்த்தத்தில் நீராடி, பின்பு தர்ப்பாரண்யேசுவரரை வணங்கிய பின் சனீஸ்வரரை தரிசிக்க அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நற்பலன்களும் பெருகும்.

திருநள்ளாறு தவிர்த்து பிற சனி தோஷ பரிகாரத்தலங்கள் குச்சனூர், ஏரிக்குப்பம் முதலியன. சனி பகவான் தனி சந்நிதி கொண்டிருக்கும் அனைத்து கோவில்களிலும் சனிபகவானை வழிபடுவதன் மூலம் தோஷ நிவர்த்தி பெற முடியும்.

ராம நாம ஜபம்:
ஆஞ்சநேயருக்கு பிரியமான, அனுமனின் பக்தர்களை சனி பகவான் தீண்டுவது இல்லை. எனவே ஆஞ்சநேய வழிபாடு, சனியின் பார்வையால் உண்டாகும் தீமைகளை மாற்றி நன்மைகளாக மாற்றும்.