விநாயகருக்கு பணத்தை காணிக்கை செலுத்திய வெள்ளை எலி வீடியோ

வினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பவர் “விநாயகர்”. எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கும் போதும் கணபதியை வழிட்டு தொடங்கும் போது, அது சிறந்த பலனை தருகிறது. அந்த விநாயக பெருமானுக்கு வருடந்தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் “விநாயக சதுர்த்தி”. அப்படி விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்ட இடத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆச்சர்ய வீடியோ ஒன்றை இங்கு காண்போம்.

இந்த காணொளி வட இந்தியாவின் ஒரு ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நிகழ்ச்சியின் போது பக்தர் ஒருவரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்யபட்டதாகும். இதில் விநாயகர் சிலை ஒரு நன்கு அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களால் வழிபட படுகிறது. அப்போது விநாயகர் சிலைக்கு கீழே வெள்ளை நிற எலி ஒன்று, விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ருபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு போய், விநாயகர் சிலையின் காலடியில் வைப்பதை நாம் காணலாம்.இக்காட்சியை அங்கிருந்த பக்தர்கள் எல்லோரும் ஆச்சர்யத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

புராணங்களில் விநாயகரின் வாகனமாக “எலி, மூஞ்சூர், பெருச்சாளி” போன்ற உயிரினங்கள் சித்தரிக்க பட்டிருக்கின்றன. “கிரௌஞ்சன்”எனும் கந்தர்வ மன்னன் முனிவர்களின் சாபம் காரணமாக, சமஸ்கிருதத்தில் எலியை குறிக்கும் மூஷிகனாக பிறந்ததாகவும், தனது பாவ வினைகளை போக்கிய விநாயக பெருமானுக்கு வாகனமாக மூஷிகன் மாறியதாகவும் புராண கதைகளில் கூறப்படுகிறது.

எத்தனை கோடி பிறவிகள் எடுத்தாலும், இறைவனின் உண்மையான பக்தன் பரமாத்மாவாக இருக்கும் இறைவன் மீதிருக்கும் தூய பக்தியை மறப்பதில்லை. இக்காணொளியில் வெள்ளை எலி செய்த இந்த செயல் விநாயக பெருமானின் மீது, அவரின் வாகனமான மூஷிகன் இன்றும் உண்மையான பக்தியுடன் இருப்பதை நிரூபிக்கிறது.

SOURCEDheivegam.com