உங்களுக்கு முறுக்கு சாப்பிட பிடிக்குமா? சுவையான இந்த மகிழம் பூ முறுக்கு எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மகிழம் பூ முறுக்கு எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 4 கப்

பாசிப்பருப்பு – 1 கப்

தேங்காய்த் துருவல் – 2 கப்

பட்டன் கல்கண்டு – 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். புழுங்கல் அரிசியை 1 மணிநேரம் ஊறவைத்து, துருவிய தேங்காய், கல்கண்டு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் பாசிப் பருப்பு மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவை முள் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும்.