திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க, உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்ட நிலை நீங்க இந்த ஹோமம் செஞ்சு வழிபடுங்க.

கணபதி ஹோமம் பலன்கள்

கணபதி ஹோமம் புதிய தொழில் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்கும். மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

maragatha-vinayagar
சரி இப்போது கணபதி ஹோமம் பலன்கள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

நோய்கள் மற்றும் தொழில் தடைகள் நீங்க கணபதி ஹோமம் பலன்கள்:
வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.

திருமண தடை நீங்க கணபதி ஹோமம் பலன்கள்:
கணபதி ஹோமம் செய்வதினால் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து சேரும்.

agni-bhagavan
அக்னி
ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.

கல்வி
குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும்.

இறை வழி பாதை
இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும்.

துர்மரணங்கள், விபத்துக்கள்
ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.

money1
தனசேர்க்கை – கணபதி ஹோமம் பலன்கள்
கணபதி ஹோமம் செய்வதினால் நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.

மேன்மை
கணபதி ஹோமம் செய்வதினால் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் மேன்மையுண்டாகும்.

குடும்ப பிரச்சனைகள்
ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.

நேர்மறை சக்திகள்
கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக நேர்மறை சக்திகள்(பாசிடிவ் எனர்ஜி) அதிகமாகும்.