சிவபெருமானின் சிலைக்கு மேல் மட்டும் பெய்த மழை! இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசய வீடியோ காட்சி உங்களுக்காக!

பஞ்ச பூத ஸ்தலங்களில், ஆகாய மார்கத்தை குறிக்கக் கூடிய கோவில் தான் சிதம்பரம் நடராஜர் கோவில். இன்று இந்த கோவிலில், நடந்த அதிசயமான நிகழ்வு பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மழைக்காலம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், நம்முடைய ஊர்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து கொண்டு வருகின்றது. அந்த வரிசையில் இன்று சிதம்பரத்தில் மழை பெய்த போது, நடந்த அதிசயம் இது.

chidambaram-logo

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில், இன்று மாலை வேளையில், வெளியில் இருக்கும் நடனமாடும் நடராஜர் சிலையின் மேல் பகுதியில், மட்டும் மழை பெய்த காட்சியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். நடனமாடும் இந்த நடராஜர் சிலைக்கு அருகில் இருக்கும், மற்ற சிலைகளின் மேல், மழைத்துளி படவில்லை என்பது தான் ஆச்சரியப்படக் கூடிய விஷயம். கலியுகத்திலும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதற்காக இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

எல்லோரும் வியந்து ஆச்சரியத்துடன் கண்டு களித்த வீடியோ உங்களுக்காக இதோ!