போர் போடும்போது அடித்த அதிஷ்டம். பானையில் சிக்கிய தங்க புதையல் விவரம் இதோ

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் போர் போடுவதற்கு தோண்டப்பட்ட குழியில் இருந்து பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் தங்க புதையல் இருந்துள்ளது ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்குள் இருந்த மண்பானை
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எடுவடலா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் மனுகொண்டா சத்திய நாராயணா. விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு தனது வயலில் போர் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கான இயந்திரம் வந்து போர் போடுவதற்கு ஆரம்பித்த போது, பூமிக்குள் பானை ஒன்று இருந்துள்ளது. குறித்த பானையை எடுத்து பார்த்த போது அதில் தங்க நாணயம் இருந்துள்ளது.

ஆரம்பத்தில் 17 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பின்பு ஒரு நாணயம் கிடைத்துள்ளது. இந்த தங்க நாணயங்களின் எடை 61 கிராம் என்று கூறப்படுகின்றது.

தகவல் அறிந்ததும் தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள், மண்பாண்டம் மற்றும் அதற்குள் இருந்த 18 தங்க காசுகளை கைப்பற்றியுள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் விவசாய பண்ணையில் போர் போடும்போது தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.